சமூக அறிவியல் வகுப்பு 10
மொத்த மதிபெண் 100
பகுதி அ
Iஅனைத்து வினாக்களுக்கும் விடை தருக:- 30X1=30
1, வங்கபிரிவினை நிகழ்ந்த ஆண்டு எது
அ, 1911 ஆ,1912 இ,1905 ஈ,1910
2, கூட்டுரறவுச் சங்கங்களை அறிமுகபடுத்தியவர்
அ.ரிப்பன் பிரபு, ஆ.கர்சன் பிரபு, இ.லிட்டன் பிரபு, ஈ.டல்ஹௌசி பிரபு
3, வாஸ்கோடா காமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்தவர்
அ.பிஜப்பூர் சுல்தான், ஆ.விஜய நகர அரசர், இ.மன்னர் சாமரின், ஈ.சந்திர நாகூரின் மன்னர்
4 பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்
அ.தயானந்த சரஸ்வதி, ஆ.அன்னிபெசன் அம்மையார், இ.இராஜாராம் மோகன்ராய், ஈ.சுவாமி விவேகானந்தர்
5, சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைகாலபெயர்
அ. நரேந்தர், ஆ.மூல் சங்கர், இ.தயானந்தர், ஈ. சந்திர சென்
6, 1857-நடந்த புரட்சியை பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம்
அ.சிப்பாய் கலகம், ஆ.பெருங்கலகம், இ.சுதந்திர போர், ஈ.விடுதலைப் போர்
7,சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
அ.1828 ஆ.1829 இ.1835 ஈ.1835
8, ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் நடைபெற்ற பகுதி
அ. அமெரிக்கா ஆ.பாண்டிச்சேரி இ.ஐரோப்பா ஈ.காரைக்கால்
9,கோவாவைக் கைப்பற்றியவர்
அ.அல்மெய்டா ஆ.வாஸ்கோடா காமா இ.அல்புகர்க்கு ஈ.சாமரின் மன்னர்
10 பொருத்துக
அ. தயனந்த சரஸ்வதி----- 1.நியூ இந்தியா
ஆ.அரவிந்த கோஷ் ------ 2.சுய ராஜ்ஜியம்
இ.அன்னிபெசன்ட் அம்மையார்------3. தன்னாட்சி இயக்கம்
ஈ.பாலகங்காதர திலகர் ---------- 4.வந்தே மாதரம்
அ ஆ இ ஈ’
அ 1 3 4 2
ஆ 3 4 1 2
இ 2 4 1 2
ஈ 3 2 4 1
கோடிட்ட இடத்தை நிரப்புக:-
11.விஜய நகர அரசுடன் தன் உறவைப் பலப்படுத்தியவர்______________ ஆவர்
12. பிரெஞ்சு ஆளுனர் கவுண்ட்-டி-லாலி கைப்பற்றிய கோட்டை__________ ஆகும்
13. விக்டோரியா பேரரசியின் ஆறிக்கையை__________பிரவு_________தர்பாரில் வாசித்தார்
14.விவேகானந்தரைப் பொறுத்தவரை___________மற்றும் _________ஆகியோருக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் மிக சிறந்த தொண்டாகும்
15. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள்___________ மற்றும்___________ ஆவார்கள்
16.மத்திய பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை
அ.67 ஆ.57 இ.87 ஈ.97
17.இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
அ. மும்பை ஆ.சென்னை இ.புதுதில்லி ஈ.கொல்கத்தா
18.கிராமத்தலைவரை ________ஆக தேர்ந்தெடுக்கின்றனர்
19.பொருத்துக
அ.வாக்களிக்கும் வயது 1 அமெரிக்க ஐக்கிய நாடு
ஆ.இரட்டைக்குடியுரிமை 2 கைகளை உயர்த்துதல்
இ. கைகளை உயர்த்துதல் 3 18 ஆண்டுகள்
ஈ. சின்னங்களை ஒதுக்குதல் 4 தேர்தல் ஆணையம்
அ ஆ இ ஈ
அ 1 2 3 4
ஆ 4 3 1 2
இ 3 1 4 2
ஈ 3 1 2 4
20.சிட்டிசன் என்னும் சொல் இம்மொழியில் இருந்து பெறப்பட்டது
அ.இலத்தீன் ஆ.கிரேக்கம் இ.ஆங்கிலம் ஈ.உருது
சரியான விடையை தேர்தெடுத்து எழுது
21. இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்ச ரேகை
அ.புவி நடுக்கோடு ஆ.பூமத்திய ரேகை இ.கடக ரேகை ஈ.மகர ரேகை
22.தொட்டபெட்டா அமைந்துள்ள மலை
அ.ஆனைமலை ஆ.இமயமலை இ.நீலகிரி மலை ஈ.குடகு மலை
23.பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண்
அ.வண்டல் மண் ஆ.கரிசல் மண் இ.களிமண் ஈ.செம்மண்
24.பொருத்துக:-
அ.வண்டல் மண் 1.சுந்தரவனக்காடுகள்
ஆ.செம்மண் 2.நெல்
இ.ஈரக்காடுகள் 3.பருப்பு வகைகள்
ஈ.பசுமைமாறக்காடுகள் 4. தேக்கு
அ ஆ இ ஈ
அ 2 3 4 1
ஆ 3 2 4 1
இ 2 3 1 4
ஈ 2 4 3 1

25. சரியான கூற்றைத் தேர்வு செய்க
ஒன்று மட்டும் சரியானது
அ.வட அரைக்கோளத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை கோடைக்காலம்
ஆ. கடக அட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாகவிழும்
ஐ.ஸ்ரீலங்காவை இந்தியாவில் இருந்து பிரிப்பது பாக் ஜலச்சந்தி
ஈ. இந்தியாவில் அதிக வெப்பநிலை உள்ள மாதம் ஜூன்
கோடிட்ட இடத்தை நிறப்புக:-
26.கடல் மட்டத்திற்கு உயரே செல்ல செல்ல வெப்பநிலை _____________
27.நர்மதா மற்றும் தப்தி நதிகள்_________கடலில் சங்கமிக்கின்றன.
28.மாநிலங்களும் யூனியன் வட்டாரங்களும்_________அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன.
29.பொருத்துக:-
அ.வடஎல்லை 1.வங்கக் கடல்
ஆ.தென் எல்லை 2.அரபிக்கடல்
இ.கிழக்கு எல்லை 3.இந்தியபெருங்கடல்
ஈ.மேற்கு எல்லை 4.இமயமலை

அ ஆ இ ஈ
அ 4 2 3 1
ஆ 4 3 2 1
இ 4 3 1 2
ஈ 4 2 1 3

30.பொருத்துக:-
அ, தக்கான பீடபூமி 1 ஏழு மடிப்பு
ஆ.சாத்பூரா 2.ஹூக்ளி
இ.கிழக்கு குன்றுகள் 3 லாவா பீடபூமி
ஈ. கங்கை 4.கொல்லிமலை
அ அ இ ஈ
அ 1 3 2 4
ஆ 4 2 3 1
இ 3 1 4 2
ஈ 3 1 2 4




பகுதி ஆ
வரலாறு
:-(நான்கு மட்டும்) 4X2=8
31.இந்திய தேசிய காங்கிரசு எப்போது யாரால் தோற்றுவிக்கப் பட்டது?
32.இந்திய கல்வித்துறையில் டல்ஹௌசி பிரபு செய்த சீர்திருத்தங்களை குறிப்பிடுக.
33.முதல் கர்நாடகப் போருக்கான காரணங்களை வெளிப்படுத்துக.
34.பெண்களின் முன்னேற்றத்திற்கு இராஜாராம் மோகன் ராய் ஆற்றிய பணிகளை விளக்குக.
35.19-ம் நூற்றாண்டின் சமூக சமயச் சீர்திருத்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தி செய்தி தாள்களின் பங்கு பற்றி குறிப்பிடுக.
36.லக்னோ ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
குடிமையியல்(இரண்டு மட்டும்)
37.கூட்டாட்சி அரசின் அம்சங்கள் யாவை?
38. இடைத்தேர்தல் உபதேர்தல் என்றால் என்ன?
39.குடியுரிமை என்றால் என்ன?
புவியியல்:- நான்கு மட்டும்
40. தக்காணபீடபூமி பற்றி குறிப்பு வரைக?
41. மழை நீர் அறுவடை என்றால் என்ன?
42.ஊசியிலைக்காடுகள் இந்தியாவில் எங்கே காணப்படுகிறது?
43.இந்தியாவை துணைக்கண்டம் என்று ஏன் அழைக்கிறோம்?
44.இயற்க்கை தாவரம் என்றால் என்ன?
45. இந்தியாவின் அமைவிட முக்கியத்துவத்தை விவரி?
பகுதி-இ
விரிவான விடையளி:-எல்லா வினாக்களுக்கும் விடை தருக:
46. அ.இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் வீழ்ச்சி அடையக் காரணம் யாவை? (அல்லது) ஆ.வில்லியம் பெண்டிங் பிரபுவின் சமூக சீர்திருத்தங்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
47.அ. இந்திய தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்களை விளக்குக. (அல்லது ) ஆ. 19-ம் நூற்றாண்டு சமூக சமய சீர்திருத்த இயக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளை வரிசைப்படுத்துக.
48.அ.இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் பணிகள் யாவை? (அல்லது) ஆ.நேர்முக தேர்தலில் நிறை குறைகள் யாவை?
49. அ இந்திய குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் விளக்குக (அல்லது) ஆ.கூட்டாட்சி அரசின் நிறைகுறைகளை குறிப்பிடுக
50. அ.இந்தியாவின் வேற்றுமையின் ஒற்றுமை பற்றி விவரி (அல்லது) ஆ. இந்தியாவில் நிலத்தோற்றம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது ஏதெனும் ஒன்றினை விவரி
51.அ. இந்தியாவின் மண் வகைகளை பற்றி ஓர் கட்டுரை வரைக(அல்லது) ஆ, மழைநீர் அறுவடையின் முக்கியத்துவம் பற்றி விவரி
பகுதி ஈ
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
இந்திய வரைபடத்தில் வெல்லெஸ்லி பிரபு காலத்தின் ஆங்கிலப் பகுதியை வரைந்து அதில் கீழ்கண்ட பகுதிகளை குறிக்கவும்.
1. ஹைதராபாத்
2.பட்னா
3.கொல்கத்தா
4.ஸ்ரீநகர்
5.தஞ்சாவூர்
53 கீழ்கண்ட நிகழ்ச்சிகளை காலக்கோட்டில் அமைத்திடுக
1. முதல் ரெயில் பாதை
2.ஆரிய சமாஜம்
3.சிகாகோ உலக சமய மாநாடு
4.சிப்பாய் கலகம்
5.இந்திய தேசிய காங்கிரசு தொடக்கம்
54. இந்திய வரைபடத்தில் கீழ்கானும் ஏதேனும் ஒன்றை மட்டும் வரைக:-
1.இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்
2.இந்திய ஆறுகள்
3.தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் மழைபெறும் பகுதி

55 உனது அருகாமையிலுள்ள கிராமத்தை பற்றி சமூக பொருளாதார மற்றும் கலாச்சார விவரங்களை சேகரிக்கும் வினாப்பட்டியலை தயார் செய்யவும்.


XtGem Forum catalog